நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், : சின்னசேலம் அருகே கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தொட்டியம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது சுண்ணாம்பு ஓடை அருகே பிளாஸ்டிக் கேனில் பைத்தந்துறை, புதுார் கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் ஆனந்தராஜா, 37; கள் விற்பனை செய்தது தெரிந்தது. தொடர்ந்து, 15 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.