/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
/
பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 04, 2025 09:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே போதை விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். ஆசிரியர் சின்னதுரை வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.
ஆசிரியர் லோகநாராயணன் நன்றி கூறினார்.