/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 14, 2025 12:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மத்திய அரசின் நிஷா முக்த் பாரத் அபியான் மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நலன் சிறப்பு சேவைத்துறை சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட குழுந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, இளைஞர் நீதிக்கழு உறுப்பினர் ஜெயசந்திரன், மருத்துவ கல்லுாரி செவிலியர் கலைமணி பங்கேற்று போதை பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
தொடர்ந்து, போதி கலைக்குழுவினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் செய்திருந்தனர். கல்லுாரி துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் நன்றி கூறினார்.