/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்
/
சாலையில் படுத்து போதை ஆசாமி அலம்பல்
ADDED : நவ 01, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுநதுார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் போதை ஆசாமி சாலையில் படுத்து அலம்பலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்னை சாலையில் 32 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமி ஒருவர் நேற்று மதியம் 1.50 மணியளவில் திடீரென சாலை யின் நடுவே படுத்து அலம்பலில் ஈடுபட்டார்.
தகவலறிந்த போலீசார் போதை ஆசாமியை அப்புறப்படுத்த போராடினர். ஆனால் முடியவில்லை.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 15நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு, போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. போதை ஆசாமியின் அலம்பலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

