/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
/
ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா
ADDED : ஆக 20, 2025 07:33 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
ஜிப்மர் மருத்துவமனை பேராசிரியர் காதம்பரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2024--25ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மூன்றாம் பருவத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்களின் பெற்றோர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். குருகுலத்தின் சீனியர் முதல்வர் நிஷ்காம்ய ப்ராணா மாஜி அறிமுகவுரையாற்றினார். குருகுலம் முதல்வர் சசிகலா வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குருகுலத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.