/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை
/
தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை
தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை
தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை
ADDED : ஜன 28, 2025 06:29 AM
தியாகதுருகம் :   தியாகதுருகம் நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஏரியில் கலக்காமல் சுத்திகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தியாகதுருகம் நகரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள மேல்பூண்டி தக்கா ஏரி மற்றும் புக்குளம் ஏரியில் கலந்து நீர் மாசடைந்து உள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீரை சுத்திகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டி கடந்த 20ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதற்கான இடத்தை விரைந்து தேர்வு செய்து தரும்படி வருவாய் துறைக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ராணி கடிதம் அனுப்பி உள்ளார்.
அதற்கான இடம் தேர்வு செய்ததும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் பாதுகாப்பாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என செயல் அலுவலர் ராணி உறுதி அளித்துள்ளார்.

