ADDED : மார் 21, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணம்பூண்டியில் பிரபு என்பவரது விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று காலை துாக்கில் தொங்குவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துாக்கில் தொங்கிய முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு, கருப்பு நிற அரைக்கால் சட்டை அணிந்திருந்தார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
