ADDED : ஆக 24, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 80; பெங்களூருவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து சொந்த ஊர் செல்ல திருக்கோவிலுார் பஸ் நிலையம் வந்தவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட கேசவன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.