/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவர் சாவு : போலீஸ் விசாரணை
/
முதியவர் சாவு : போலீஸ் விசாரணை
ADDED : மே 13, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கதக்க முதியவர் மயங்கி கிடந்தார். போலீசார் அந்த முதியவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட முதியவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.