/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
/
ஏரியில் காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்
ADDED : ஏப் 21, 2025 05:29 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஏரியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று மாலை 3:00 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி சேர்ந்த குஞ்சப்பன் மகன் காந்தி,70; என தெரியவந்தது.
அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமாக ஏரியில் இறந்து கிடந்தார்.
தொடர்ந்து, தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

