ADDED : ஜூன் 20, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் அருகே வயிற்று வலி மருந்திற்கு பதிலாக தைலம் குடித்த மூதாட்டி உயிரிழந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த தாவடிப்பட்டு, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரி மனைவி தங்கம், 80; இவர் தனது மகன் காமராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வயிற்று வலி மருந்து என நினைத்து வீட்டில் இருந்த தைலத்தை எடுத்து குடித்தார்.
அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.