/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டிற்குள் இறந்து கிடந்த மூதாட்டி: போலீசார் விசாரணை
/
வீட்டிற்குள் இறந்து கிடந்த மூதாட்டி: போலீசார் விசாரணை
வீட்டிற்குள் இறந்து கிடந்த மூதாட்டி: போலீசார் விசாரணை
வீட்டிற்குள் இறந்து கிடந்த மூதாட்டி: போலீசார் விசாரணை
ADDED : டிச 08, 2024 04:58 AM
கள்ளக்குறிச்சி : தென்கீரனுாரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் வள்ளி,62; மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சமுதாய நல செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணமாகாததால் வள்ளி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில தினங்களாக வள்ளியின் வீடு மூடியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டின் கதவை உடைத்தனர்.
அதில், அறையில் அழுகிய நிலையில் வள்ளி இறந்து கிடந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் வள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஹீமோ குளோபின் குறைவு காரணமாக வள்ளி உடல் நிலை சரியில்லாமல் இருந்தது தெரிந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.