/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் மயங்கிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
/
சாலையில் மயங்கிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
சாலையில் மயங்கிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
சாலையில் மயங்கிய மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 14, 2025 06:43 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில், சாலையோரம் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு, அவரது உறவினர்களிடம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
மூங்கில்துறைப்பட்டு, நான்கு முனை சந்திப்பில் சாலையோரம், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன் மற்றும் ராஜேந்திரன், அங்கு விரைந்து வந்து, மூதாட்டியை மீட்டு விசாரித்தனர்.
அவர், திருவண்ணாமலை மாவட்டம், சேப்பாப்பட்டு கூடலூரை சேர்ந்த தெய்வானை என்பதும், ஈருடையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனூர், மேட்டுக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த போது மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து உறவினர்களை வரவழைத்த போலீசார், மூதாட்டியை அவர்களுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

