/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
ADDED : நவ 15, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் 1.1.2025 தேதி தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நாளை(16 ம் தேதி), 17 ம் தேதி, வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இச்சிறப்பு முகாம்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் இன்று(15 ம் தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதில், உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுள்ள படிவங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.