/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி கிணற்றில் மின்மோட்டார் திருட்டு
/
ஊராட்சி கிணற்றில் மின்மோட்டார் திருட்டு
ADDED : ஏப் 26, 2025 06:31 AM
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலை அருகே, ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு ஊராட்சியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தரை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் நடக்கிறது.
வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. மீண்டும் நேற்று காலை 8 மணிக்கு கிணற்றுக்கு சென்று பார்த்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரில் கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.