ADDED : செப் 08, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரகே மின் மோட்டாரை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பசுபதி, 42; இவருக்கு சொந்தமான நிலத்தில் மின் மோட்டார் பொருத்தி இருந்தார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கிணற்றில் இருந்த 5 எச்.பி., மின்மோட்டார் மற்றும் ஒயர் திருடிச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மின்மோட்டாரை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.