ADDED : ஜூன் 25, 2026 06:51 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தில் ரூ.6.23 லட்சம் மதிப்பில் மின்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு, வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கிற்கு செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.6.23 லட்சம் மதிப்பில் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை கலெக்டர் பத்மஜா நேற்று துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
