ADDED : மே 21, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் எலக்ட்ரீஷியன் இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 50; எலக்ட்ரீஷியன்.
இவர், நேற்று காலை ஸ்பிளண்டர் பைக்கில் சங்கராபுரம் நோக்கி வந்தார்.
தேவபாண்டலம் அருகே எதிரே வந்த மினி சரக்கு வேன் மோதியதில் ராஜேந்திரன் படுகாயமடைந்தார். உடன், சங்கராபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.