/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரியலுார் பகுதிகளில் மாற்று ஏற்பாட்டில் மின்சாரம்
/
அரியலுார் பகுதிகளில் மாற்று ஏற்பாட்டில் மின்சாரம்
ADDED : ஜன 24, 2025 06:33 AM
ரிஷிவந்தியம்: அரியலுார் துணைமின்நிலையத்தில் உயர்திறன் கொண்ட மின்மாற்றி பொருத்தப்பட உள்ளதால், 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் மின்சாரம் வழங்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரியலுார் துணை மின்நிலையத்தில் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இதை 25 எம்.வி.ஏ., உயர்திறன் கொண்ட மின்மாற்றியாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், நாளை (25ம் தேதி) காலை 7 மணி முதல் 30ம் தேதி (வியாழன் கிழமை) மாலை 5 மணி வரை அரியலுார் துணை மின்நிலையம் மூலமாக மின்சாரம் வழங்கப்படும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அருகில் உள்ள துணை மின்நிலையங்கள் மூலமாக மாற்று ஏற்பாட்டில் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இந்த 6 நாட்களில் ஏதேனும் மின்தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.