/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் மீட்டர் வெடித்து தீ பரவியதால் பரபரப்பு
/
மின் மீட்டர் வெடித்து தீ பரவியதால் பரபரப்பு
ADDED : மே 24, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மின் மீட்டர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் சாலையில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கி, டீ கடை, ஜிம், தனியார் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த கட்டடத்திற்கான மின் மீட்டர்கள் தரைத்தளத்தில் உள்ளன.
நேற்று மாலை 7:30 மணிக்கு, மின்மீட்டர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து, தீ பிடித்து எரிய துவங்கின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.