/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்கம்பம் முறிந்து விழுந்து மின் ஊழியர் பலி
/
மின்கம்பம் முறிந்து விழுந்து மின் ஊழியர் பலி
ADDED : அக் 01, 2025 11:12 PM
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் தற்காலிக மின் ஊழியர் உயிரிழந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் மாதவன், 25; இவர் கடந்த 3 ஆண்டுகளாக எடுத்தவாய்நத்தம் மின் பகிர்மான அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த செப். 28 ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, மாதவன் சக மின் ஊழியர்களுடன் கோட்டக்கரை கிராமத்தில் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, மின் கம்பம் திடீரென முறிந்து கீழே விழுந்தது. இதில் கம்பத்தின் மீது ஏறி வேலை செய்து வந்த மாதவன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற கச்சிராயபாளையம் போலீசார் மாதவனின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.