தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மிண்ணனு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மிண்ணனு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மிண்ணனு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : அக் 07, 2026 05:23 PM

ADDED : அக் 07, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 05:23 PM ADDED : அக் 07, 2026 05:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பொதுமக்களுக்கு மிண்ணனு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கள்ளக்குறிச்சி கிளை மற்றும் கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வங்கியின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 86 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 10 விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் பல்வேறு வகையான கடன் திட்ட விபரங்கள், அரசு நலத்திட்ட கடன்கள், மானியம், குறைந்த வட்டி விகிதம், ஏ.டி.எம்., மையங்கள், மைக்ரோ ஏ.டி.எம்.,கள், மொபைல்போன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து உதவி பொது மேலாளர் கணபதி விளக்கி கூறினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள், சிறு வணிக கடன், மத்திய காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் என மொத்தமாக 8 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.45 லட்சத்துக்கான வைப்புத்தொகை பெறப்பட்டது. நிகழ்ச்சியில், கிளை தணிக்கை அலுவலர் இளையாப்பிள்ளை, சரக மேற்பார்வையாளர்கள் மோகன், கருணாகரன், சக்திவேல், சங்க செயலாளர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us