UPDATED : அக் 15, 2026 07:57 PM
ADDED : அக் 15, 2026 07:54 PM

கள்ளக்குறிச்சி: குரால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மின்னணு பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, இணைப்பதிவாளர் தயாளன் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் கணபதி முன்னிலை வகித்தார். மேலாளர் சக்திவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் பல்வேறு வகையான கடன் திட்ட விபரங்கள், அரசு நலத்திட்ட கடன்கள், மானியம், குறைந்த வட்டி விகிதம், ஏ.டி.எம்., மையங்கள், மைக்ரோ ஏ.டி.எம்.,கள், மொபைல்போன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து உவிளக்கி கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் 12 லட்சம் வைப்புத் தொகை வசூல் பெறப்பட்டு, சிறு வணிகம் மற்றும் கல்வி கடன் கோரிய பயனாளிகளுக்கு 3 லட்சம் ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டது. சரக மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், உட் தணிக்கை அலுவலர் இளையாப்பிள்ளை, சின்னசேலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வங்கி செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
