/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் செயல் விளக்கம்
/
மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் செயல் விளக்கம்
ADDED : ஜன 23, 2026 06:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இளம் வாக்காளர்களுக்கு மாதிரி மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் மூலம் செயல்முறை விளக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் -2026 முன்னிட்டு மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்து பொதுமக்கள், இளம் வாக்காளர்கள, ஓட்டுபதிவு இயந்திரங்களை பயன்படுத்த தெரியாத வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையங்கள் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து இளம் வாக்காளர்கள் மாதிரி மின்னணு ஓட்டுபதிவு இயந்திரத்தில் ஆர்வமுடன் ஓட்டளித்து கேட்டறிந்தனர்.
மாவட்டத்தில் மாதிரி மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்கள், நான்கு சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள 1,435 ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று முதல் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மாதிரி ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஓட்டளித்து விழிப்புணர்வு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி, தேர்தல் தாசில்தார் பரந்தாமன், கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

