/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அவசர கட்டுப்பாட்டு மையம்: கலெக்டர் ஆய்வு
/
அவசர கட்டுப்பாட்டு மையம்: கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 05:21 AM

கள்ளக்குறிச்சி : வடக்கிழக்கு பருவமழையொட்டி பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 24 மணி நேர அவசரக் கட்டுபாட்டு மையத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வானிலைத் தொடர்பான முன்னறிப்புகள், மழை அளவு போன்றவை குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வடக்கிழக்கு பருவ மழையையொட்டி கலெக்டர் அலுவல வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் 24 மணி நேர அவசர கட்டுபாட்டு மையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் 24 மணி நேர அவசர கட்டுபாட்டு மையத்தில் சுழற்சி முறையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் கொண்ட குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு மாவட்டம் முழுவதும் மழை பாதிப்பு விவரங்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இதனை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் தொடர்பான தகவல்களுக்கு அவசர கட்டுபாட்டு மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இந்த அவசர கட்டுபாட்டு மையத்தினை 1077 என்ற கட்டணமில்லா எண், 04151-228801 மற்றும் 9787055764 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். ஆய்வின் போது பேரிடர் மேலாண்மை தாசில்தார் நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.