ADDED : டிச 11, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த உ. செல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை உ.செல்லுார் பகுதியில் ஒரு வீட்டில் ஒயரிங் வேலைக்காக சுவற்றில் டிரில்லர் மிஷினைக் கொண்டு துளையிட்டார். அப்போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கு கொண்டு செல்லும் வழியில் பாலகிருஷ்ணன் இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

