/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 20, 2024 05:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரி மற்றும் எம்.ஆர்.எப்., டயர்ஸ் நிறுவனம் இணைந்துவேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் சிவகுமரன் தலைமை தாங்கினார். கல்லுாரியின் வேலை வாய்ப்பு அலுவலர் பழனியப்பன் வரவேற்றார்.
முகாமில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த 2019 -2023ல் படித்த மற்றும் தற்போது பயிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளின் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் வழங்கினார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
கல்லுாரிகளின் தலைமை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.