/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 31, 2025 10:33 PM
கள்ளக்குறிச்சி; தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 2ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 2ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற செய்ய வேண்டும். மகளிர் திட்டம், பெற்றோர் ஆசிரியர் கழகம், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அதிகளவில் முகாமில் பங்கேற்க செய்தல், தடையில்லா மின்சாரம், மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

