ADDED : செப் 01, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழகத்தில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைசேர்ந்த 119 பட்டதாரிகள் நேர்க்காணலில் கலந்து கொண்டனர். பணிக்கு தேர்வான 27 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் வேலைவாய்ப்பு அலுவலர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.