/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்
ADDED : நவ 06, 2024 07:35 AM
கள்ளக்குறிச்சி : தனியார் நிறுவன சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் வரும் 9ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலை வாயப்பு வழங்கிடும் வகையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் இணைந்து நடத்துகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்க https://forms.gle/9kSXaQGa6g6LMEdj6 இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முகாமில் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணி அனுபவச் சான்று மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றுடன் முகாமில் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.