/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்; கலெக்டர் துவக்கி வைப்பு
/
வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்; கலெக்டர் துவக்கி வைப்பு
வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்; கலெக்டர் துவக்கி வைப்பு
வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 11, 2024 11:08 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
பயிற்சி நிறுவனத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வணிக முறை மலர் சாகுபடி, போட்டோ பிரேமிங், சி.சி.டி.வி., பொருத்துதல் - பழுது நீக்குதல், மகளிர் அழகு கலை, மகளிருக்கான தையல் உள்ளிட்ட 61 தொழிற் பயிற்சிகள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்தொழிற் பயிற்சிகள் 10, 13, 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு முதல் இருக்க வேண்டும். பயிற்சி காலங்களில் இலவச மதிய உணவு, அனைத்து வசதிகளுடன் கூடிய உரைநடை மற்றும் செயல்முறை வகுப்புகள், பல்துறை நிபுணர்களின் நேரடி சிறப்பு பயிற்சி, பண்ணை மற்றும் தொழிற் கூடங்களை நேரில் பார்வையிடுதல், பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர்மன்றத் தலைவர் சுப்பராயலு, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.