/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலி மதுபாட்டில்களை பெறும் திட்டம்; டாஸ்மாக் கடைகளில் நாளை அமல்
/
காலி மதுபாட்டில்களை பெறும் திட்டம்; டாஸ்மாக் கடைகளில் நாளை அமல்
காலி மதுபாட்டில்களை பெறும் திட்டம்; டாஸ்மாக் கடைகளில் நாளை அமல்
காலி மதுபாட்டில்களை பெறும் திட்டம்; டாஸ்மாக் கடைகளில் நாளை அமல்
ADDED : நவ 26, 2025 07:21 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
சென்னை ஐகோர்ட் உத்தரவின் படி காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை 27ம் தேதி அமலுக்கு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில், அதன் மீது கடை எண் மற்றும் 10 ரூபாய் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேலும், டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுடன் 10 ரூபாய் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் பெறப்படும். வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு, அதே கடையில் திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.