/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சங்கராபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 31, 2025 10:39 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் பேரரூாட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
சங்கராபுரத்தில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஆற்று பாதை தெருவில் 8 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள தோப்பு புறம்போக்கு இடத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதனை பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் தலைமையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நடந்தது.
இதில் வருவாய் ஆய்வாளர் திவ்யா, சார் ஆய்வாளர்கள் சுஜாதா, சூர்யா, வி.ஏ.ஓ., குமார், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த நெற்பயிர்கள், மரங்கள் ஆகியவை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.