/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
ADDED : மார் 15, 2025 08:22 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி, ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோர் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் அருள் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் ராஜேஸ்வரி, அனந்தராமன், செல்வராணி வாழ்த்தி பேசினர்.
உதவி பேராசிரியர் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி வணிகவியல் துறைத் தலைவர் வீரலட்சுமி, இளைய தலைமுறையினர் தொழில் முனைவோராக உருவாதல் தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள், முதலீடு செய்யும் விதம், தொழில் நுணுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
உதவி பேராசிரியர் சுபாஷினி நன்றி கூறினார்.