/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு
/
தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு
ADDED : செப் 16, 2025 07:14 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சி வகுப்புக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆவின் பொது மேலாளர் ஜோஸ்பின் தாஸ், உதவி பொது மேலாளர்கள் பால் பெருக்கு பிரிவு தமிழ்அண்ணன், இடுபொருள் பிரிவு வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக, வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு குறுகிய கால திறன் வகுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, சின்னசேலம் ஆவின் அலுவலகத்தில், கறவை மாடுகள் மே லாண்மை என்ற தலைப்பில் 21 நாள் பயிற் சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. 30 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.