/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் சமத்துவ நாள் விழா ரூ.66.05 கோடி நலத்திட்ட உதவி
/
கள்ளக்குறிச்சியில் சமத்துவ நாள் விழா ரூ.66.05 கோடி நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் சமத்துவ நாள் விழா ரூ.66.05 கோடி நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் சமத்துவ நாள் விழா ரூ.66.05 கோடி நலத்திட்ட உதவி
ADDED : ஏப் 14, 2025 11:35 PM

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் நடந்த சமத்துவ நாள் விழாவில், 4,107 பயனாளிகளுக்கு ரூ.66.05 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவாக நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
எம்.பி., மலையரசன், மணிகண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் படத்திற்கு மலர் அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வருவாய், ஊரக வளர்ச்சி, மகளிர் திட்டம், கூட்டுறவு, வேளாண் வணிகம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், முன்னோடி வங்கி, சமூக நலன், கால்நடை பராமரிப்பு உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 4,107 பயனாளிகளுக்கு 66.05 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில், டி.ஆர்.ஓ., ஜீவா, நகராட்சி சேர்மன் சுப்ராயலு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், தாட்கோ மாவட்ட மேலாளர் பியர்லின், மாவட்ட பழங்குடியினர் நலன் திட்ட அலுவலர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.