ADDED : ஜன 14, 2025 07:22 AM

திண்டிவனம்
திண்டிவனம் நகராட்சியில் சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த விழாவில் புதுப்பானை வைத்து பொங்கலிட்டு பூஜை செய்தனர். கமிஷனர் குமரன், துணை சேர்மன் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி துணை பதிவாளர்கள் சுகந்தலதா, சுரேஷ், குறிஞ்சி மணவாளன், விஜியகுமாரி, இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை, இளநிலை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் நிர்மல், நிறைமதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கயிறு இழுத்தல், உறியடித்தல், கோல போட்டி, லெமன்-ஸ்பூன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

