/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ம் தேதி கட்டுரை, பேச்சு போட்டி; பங்கேற்க கலெக்டர் அழைப்பு

ADDED : ஜூலை 08, 2025 10:47 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, கட்டுரை, பேச்சுப்போட்டி வரும் 11ம் தேதி , கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பேச்சுப்போட்டிக்கான தலைப்பு போட்டி நடக்கும் நாளுக்கு முன்னதாக சி.இ.ஓ., மூலமாக தெரிவிக்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.