/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டம் பிரித்தும் பயனில்லை விழுப்புரத்திற்கு அலையும் மக்கள்
/
மாவட்டம் பிரித்தும் பயனில்லை விழுப்புரத்திற்கு அலையும் மக்கள்
மாவட்டம் பிரித்தும் பயனில்லை விழுப்புரத்திற்கு அலையும் மக்கள்
மாவட்டம் பிரித்தும் பயனில்லை விழுப்புரத்திற்கு அலையும் மக்கள்
ADDED : மார் 18, 2025 04:12 AM
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக பிரித்தும் முக்கிய அலுவலகங்கள் விழுப்புரத்திலேயே இயங்கி வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் அலைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக, உருவாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த மாவட்டத்திற்கு என டாஸ்மாக் மேலாளர் அலுவலகம், முத்திரைத்தாள் தனி தாசில்தார், அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கள்ளக்குறிச்சி டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் செயல்பாட்டிற்கு வரவில்லை. மாவட்ட மேலாளர், அலுவலக மேலாளர், பறக்கும்படை தனி தாசில்தார் ஆகிய பணியிடங்களை நிரப்பி உடனடியாக அலுவலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இதேபோல், கள்ளக்குறிச்சி முத்திரைத்தாள் தனி தாசில்தார், கேபிள் டிவி தனி தாசில்தார் பணிகளை, விழுப்புரம் மாவட்ட தாசில்தார்கள் கூடுதலாக செய்து வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் துறை ரீதியான பணிகளுக்கு விழுப்புரம் செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. மாவட்டம் பிரித்தும், பயனில்லாமல் விழுப்புரத்திற்கு சென்றுவது பொதுமக்களிடையே வீண் அலைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.