/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காந்தி சிலை பகுதியில் பேனர் வைக்க தடை கோரி 'மாஜி' ராணுவ வீரர்கள் மனு

ADDED : ஜூலை 01, 2025 01:42 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஐந்து முனை சந்திப்பில் உள்ள காந்தி சிலை பகுதியில் பேனர் வைப்பதைத் தடுக்கக்கோரி நகராட்சி கமிஷனர் திவ்யாவிடம் மனு அளிக்கப்பட்டது.
திருக்கோவிலுார் முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முஜீர்கான், கல்யாண்குமார் ஆகியோர் அளித்த மனு:
திருக்கோவிலுார் 5 முனை சந்திப்பில் காந்தி சிலை உள்ளது. இதனைச் சுற்றி பல்வேறு வகையான போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் கட்டப்படுகிறது.
இது போன்ற செயல் தேசப்பிதாவை அவமதிக்கும் வகையில் இருப்பதால், காந்தி சிலையைச் சுற்றி போஸ்டர் ஒட்டவும், பேனர் கட்டவும் தடைவிதிக்க வேண்டும். மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.