/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 7 ம் தேதி நடக்கிறது
/
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 7 ம் தேதி நடக்கிறது
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 7 ம் தேதி நடக்கிறது
முன்னாள் படைவீரர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 7 ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூலை 04, 2025 02:37 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும்7ம் தேதி மாலை 4:00 மணிக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடக்கிறது.
கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் மற்றும் படையில் பணிப்புரிந்து வருபவர்களின் குடும்பத்தினர் தங்களின் கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி இரட்டை பிரதிகளில் அடையாள அட்டையுடன் கலெக்டரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்றுடன் வருகை புரிய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.