/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் நாளை ஏற்பாடு
/
கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் நாளை ஏற்பாடு
கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் நாளை ஏற்பாடு
கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு ஏ.கே.டி., பள்ளியில் நாளை ஏற்பாடு
ADDED : ஏப் 15, 2025 07:37 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு நாளை நடக்கிறது.
இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பெற்றோர்களின் பொருளாதார சுமையையும், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் கல்வி கட்டணச் சலுகை தேர்வு நாளை (16ம் தேதி) காலை 10:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
தேர்வில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து பள்ளிகளை சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கில வழி பயிலும் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு பாடங்கள் அடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாக்கள் இடம்பெறும்.
ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். இதில், மதிப்பெண் அடிப்படையில் 25 முதல் 100 சதவீதம் வரை பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க கட்டண சலுகை வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பிளஸ் 1 சேர்க்கையில் 5,555 ரூபாய் வரை கட்டணச் சலுகை வழங்கப்படும்.
தேர்வில் பங்கேற்க 9361165429, 6369146590 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களின் வசதிக்காக பள்ளி நிர்வாகம் சார்பில் கடலுார், திண்டிவனம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், பெண்ணாடம், விழுப்புரம், வானுார், மேல்மலையனுார், செஞ்சி, திருக்கோவிலுார், அரகண்டநல்லுார், திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லுார், விருத்தாசலம், மங்கலம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து காலை 6:.30 மணிக்கு இலவச பஸ்கள் புறப்படுகிறது. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.