/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்
/
கோமுகி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்
ADDED : அக் 23, 2024 11:14 PM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணை (560 மில்லியன் கன அடி) 46 அடி முழு கொள்ளவு கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை கல்வராயன் மலை, கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் நீர் வரத்துவங்கியது.
இதனை தொடர்ந்து அணையின் நீர் மட்டம் (520 மில்லியன் கன அடி) 44 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கோமுகி ஆறு வழியாக நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல் வரத்து நீர் முழுவதும் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.