/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கடைகளில் கலால் அலுவலர்கள் ஆய்வு
/
கள்ளக்குறிச்சி கடைகளில் கலால் அலுவலர்கள் ஆய்வு
ADDED : நவ 30, 2024 06:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டி கடை மற்றும் மளிகைக் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம், கலால் மற்றும் போலீசார் ஆய்வின் போது குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமையாளரை கைது செய்து, கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர்.
ஆய்வின் போது, நகராட்சி கமிஷனர் சரவணன், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர், கல உதவியாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் ஏமப்பேர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.