UPDATED : நவ 19, 2026 06:52 PM
ADDED : நவ 19, 2026 06:52 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நுாலகத்தில் நுாலக வார விழாவை முன்னிட்டு பழங்கால ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகக் கண்காட்சி நடந்தது.
வாசகர் வட்டக் குழு தலைவர் உதியன் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் தமிழ்ச்செல்வன், அருள்நாதன் தங்கராசு, மணிமொழி, முத்துராமன் முன்னிலை வகித்தனர். நுாலகர் அன்பழகன் வரவேற்றார்.
பழனிசாமி எம்.எல்.ஏ., பழங்கால ஓலைச்சுவடிகள் மற்றும் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நுாலகத்தைப் பயன்படுத்தி அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். வாசகர்கள் மன்னன், செந்தமிழ், ஆனந்தி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நுாலகர் சம்பத், தேவி செய்திருந்தனர். நுாலகர் தியாகராஜன் நன்றி கூறினார்.
