தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிளை நுாலகத்தின் செயல்பாடு குறித்த விளக்கப் பயிற்சி

கிளை நுாலகத்தின் செயல்பாடு குறித்த விளக்கப் பயிற்சி

கிளை நுாலகத்தின் செயல்பாடு குறித்த விளக்கப் பயிற்சி


ADDED : செப் 29, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் சார்பில் கிளை நுாலகத்தில் செயல்பாடுகள் குறித்த விளக்கப் பயிற்சி நடந்தது.

மணலுார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் திட்ட அலுவலர் மோகனா தலைமையில் மாணவியர்கள் பங்கேற்ற நுாலகமும் அதன் பயன்களும் குறித்த நேரடி விளக்கப் பயிற்சியை நுாலகர் அன்பழகன் அளித்தார்.

மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், வளர்ந்து வரும் சமுதாயத்தில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவியர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

தருண், புஷ்பா, சரஸ், ஆரோக்கிய ரூபி, செல்லதுரை, வேலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நுாலகப் பணியாளர் பாஸ்கரன், ஆசிரியர் வர்ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us