/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழு கூட்டம்
/
ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழு கூட்டம்
ADDED : டிச 13, 2024 10:36 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக ஊக்குவிப்பு குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக் டர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
வெளிநாட்டு வர்த்தக இயக்கம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஆப் இந்தியா உறுப்பினர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் ஏற்றுமதிக்கு தேவையான பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதில் அரிசி, நாட்டு சர்க்கரை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி மாவு, கால்நடை தீவனம், மக்காசோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்.
மேலும், கொய்யாபழம், பப்பாளிப் பழம், தர்ப்பூசணி, மரச்சிற்பங்கள், மலைத்தேன், கடுக்காய் ஆகிய பொருட்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்களாக தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்குடன் வாங்குபவர், விற்பனையாளர்கள் சந்திப்பு கூட்டத்தையும் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதேபோல், பொறியியல் பாகங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்டு அதன் உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், அரிசி ஆலை, சேகோ ஆலை சங்கத்தினர், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.