/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
/
கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 07, 2025 11:53 PM
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத் தில், 2025-26ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒராண்டு கால பயிற்சி, இரண்டு பருவ முறைகளை கொண்டது. இ ப்பயிற்சிக்கு, 10, பிளஸ் 2 மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற, 17 வயதுக்கு மேற்பட்டோர் விண் ணப்பிக்கலாம். அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்ததும் பயிற்சியில் நேரடியாக வந்து சேரலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பயிற்சிக்கான தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.
பயிற்சி கட்டணம் ரூ.20,750 ஒரே தவணையில் இணைய வழி மூலமாக செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சலை, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும், முதல்வரை 94425 63330, 04146 259467 ஆகிய எண்களி லும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.