sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விரைவு மற்றும் பார்சல் தபால் 'புக்கிங்' செய்ய நேரம் நீட்டிப்பு; கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

/

விரைவு மற்றும் பார்சல் தபால் 'புக்கிங்' செய்ய நேரம் நீட்டிப்பு; கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

விரைவு மற்றும் பார்சல் தபால் 'புக்கிங்' செய்ய நேரம் நீட்டிப்பு; கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

விரைவு மற்றும் பார்சல் தபால் 'புக்கிங்' செய்ய நேரம் நீட்டிப்பு; கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்


ADDED : அக் 13, 2025 12:15 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகங்களில், விரைவு மற்றும் பார்சல் தபாலினை 'புக்' செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகத்தில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) மற்றும் பார்சல் தபால்களை 'புக்கிங்' செய்வதற்கான வேலை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 'புக்கிங்' செய்யப்பட்ட நிலையில், தற்போது மாலையில் அரை மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு, இனி மாலை 6.30 மணி வரை விரைவு மற்றும் பார்சல் தபால்களை அனுப்பலாம்.

அதேபோல், திருக்கோவிலுார் தலைமை அஞ்சலகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை 'புக்கிங்' செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு மணி நேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை 5:00 மணி வரை விரைவு மற்றும் பார்சல் தபால்களை அனுப்பலாம். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us