/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜே.எஸ்., பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
/
ஜே.எஸ்., பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
ADDED : ஆக 12, 2025 11:09 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாக தலைவர் ரவிக்குமார், துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தனர். சேலம் மேக்ஸி விஷன் மருத்துவமனை டாக்டர் ஷோபனாகினி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கண் பராமரிப்பு குறித்து விளக்கி கூறி பரிசோதனை செய்தனர்.
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ, சி, ஈ மிகவும் முக்கியம். சத்து நிறைந்த கேரட், பசலைக் கீரை, ஆரஞ்சு பழம், கொழுப்பு நிறைந்த மீன், பாதாம், வால்நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். கண்களை கசக்க கூடாது, நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரை செய்யப்பட்டது.
முகாமில் டாக்டர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.